ஞாயிறு, 25 டிசம்பர், 2016

சூரியப் புயலும் நிறைவேற்றும் தீர்க்கத்தரிசனங்களும்:

உலகின் கடைசி நாட்களில் சூரியன் கருப்பாகி இருண்டுபோய் ஒளிகொடாதிருக்கும் என பரிசுத்த வேதாகமம் சொல்லுகிறது. நிகழ்காலங்களில் நடைபெறும் வான ஆராய்ச்சியானது அதையே தான் சொல்லிக்கொண்டிருக்கிறது. சூரியனில் உண்டாகி பெரிதாகிக் கொண்டிருக்கும் கரும் புள்ளிகள் பற்றி விஞ்ஞானிகள் கவலை கொண்டிருக்கிறார்கள். அதனால் உண்டாகும் காந்த புயலால் உலகின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்படும் என்கிறார்கள். பரிசுத்த வேதாகமத்தின் தீர்க்கத்தரிசனங்கள் நிறைவேறிக் கொண்டிருக்கிறது. அதை மறுத்துக் கூற ஒருவரும்மில்லை.




யோவேல் 2:31 கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருமுன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும்.

ஏசாயா 13:10 வானத்தின் நட்சத்திரங்களும் ராசிகளும் ஒளி கொடாதிருக்கும்; சூரியன் உதிக்கையில் இருண்டுபோம்; சந்திரன் ஒளி கொடாதிருக்கும்.

மத்தேயு 24:29 அந்நாட்களின் உபத்திரவம் முடிந்தவுடனே, சூரியன் அந்தகாரப்படும்,

மாற்கு 13:24 அந்நாட்களிலே, அந்த உபத்திரவத்திற்குப்பின்பு, சூரியன் அந்தகாரப்படும்.

அப்போஸ்தலர் 2:20 கர்த்தருடைய பெரிதும் பிரகாசமுமான நாள் வருமுன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும்.

வெளி 6:12 அவர் ஆறாம் முத்திரையை உடைக்கக்கண்டேன்; இதோ, பூமி மிகவும் அதிர்ந்தது; சூரியன் கறுப்புக் கம்பளியைப்போலக் கறுத்தது; சந்திரன் இரத்தம்போலாயிற்று.

வெளி 16:8 நான்காம் தூதன் தன் கலசத்திலுள்ளதைச் சூரியன்மேல் ஊற்றினான்; தீயினால் மனுஷரைக் தகிக்கும்படி அதற்கு அதிகாரங் கொடுக்கப்பட்டது.

விஞ்ஞானிகளின் எச்சரிக்கை:


சூரியனில் இருந்து வெடித்து சிதறிய காந்த புயல் பூமியை தாக்க வருகிறது என்று அமெரிக்காவின் நாசாவிஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்தனர். சூரிய புயல் பூமியை நோக்கி பல கோடி மைல் வேகத்தில் வந்து கொண்டிருப்பதாகவும், இது செயற்கைகோள்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இதன் மூலம் கம்ப்யூட்டர், செல்போன் மற்றும் தகவல்தொடர்பு சேவைகள் பாதிக்கப்படும் என்று எச்சரித்து இருந்தனர். குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் இந்த தாக்குதல் அச்சம் அதிகம் இருந்தது. உலகம் முழுவதும் உள்ள விண்வெளி விஞ்ஞானிகள் பயம் கலந்த ஆர்வத்துடன் இந்த நிகழ்வுகளை உற்று கவனித்து வந்தனர்.

இதனால் ஐரோப்பிய நாடுகள் தங்கள் நாட்டு விமானங்கள் செல்லும் பாதைகளை தற்காலிகமாக மாற்றி அமைத்து இருந்தனர். இந்த காந்த புயல் பூமியை தாக்க தொடங்கி விட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சூரியனில் நேற்று முன் தினம் கரோனா பிளாஸ்மா கதிர்வீச்சு உருவாகி அன்றைய தினமே பூமியின் காந்த மண்டலத்திற்குள் வந்து விட்டதாக நாசா விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தினர்.

பூமியின் வடமுனையில் உள்ள அயர்லாந்து,இங்கிலாந்தின் வட பகுதியான ஸ்காட்லாந்து, நார்வே ஆகிய நாடுகளை காந்த புயல் தாக்கியது. அப்போது வானில் நீலம்-பச்சை நிறம் கலந்த ஒளி வெள்ளம் காணப்பட்டது. மின்னல் போல் வானில் ஒளி பாய்ச்சுவது போல் காந்தப்புயல் தாக்கியது.
இதை விஞ்ஞானிகள் அதிநவீன டெலஸ்கோப் மூலம் படம் பிடித்து வெளியிட்டுள்ளனர். பூமியின் வடமுனையில் ஆண்டுதோறும் செப்டம்பர், அக்டோபர் மற்றும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் இது போன்ற ஒளிவெள்ளம் தோன்றுவது வழக்கம். என்றாலும் இந்த முறை சூரிய காந்த புயலால் ஜனவரி மாதத்தில் இந்த ஒளி வெள்ளக்காட்சி தோன்றியதாக தேசிய பெருங்கடல் மற்றும் வளி மண்டல நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சூரியனில் ஏற்படும் மின்காந்த புயலின் தாக்கம் வரும் 2013-ல் அதிகமாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ’மின் காந்த சூப்பர் புயல் ஒன்று பூமியை தாக்க உள்ளது. இதனால் தொடர்ச்சியாக பேரழிவு ஏற்பட்டு பூமி பாதிக்கும் நிலை ஏற்படும். எனவே அவசர சேவைகள் மற்றும் தேசிய பாதுகாப்புக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்’ என்று மின்காந்த சூப்பர் புயல் குறித்து நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது.

சூரியனின் மின்காந்த புயல் வரப்போகிறது என்று தெரியும். ஆனால், அதன் விளைவுகள் எவ்வளவு மோசமாக இருக்கும் என்பது தெரியாது. இதனால் செயற்கைக் கோள்கள், கப்பல்கள், விமானங்கள், வங்கிகள், கம்ப்யூட்டர்கள் உள்ளிட்ட எலக்ட்ரானிக் கருவிகள், தொலைத் தொடர்பு கருவிகள் பாதிக்கப்பட்டு பெரிய பிரச்சினை ஏற்படும். பெரிய நகரங்களில் மின் பாதிப்பு ஏற்படும். இந்த பாதிப்பை சரி செய்வது கடினமானதாகவும், நீண்ட நாட்களும் ஆகும். சூரிய ஒளியில் மாற்றம் ஏற்படுவதால் மின்காந்த புயல், மின்னல்தாக்குவது போல் பூமியை தாக்கும் என்றுநாசாவின் ஹீலியோ பிசிக்ஸ் பிரிவு டைரக்டர் விஞ்ஞானி டாக்டர் ரிச்சர்ட் பிஷ்ஷர் தெரிவிக்கிறார்.

இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணமும் உண்மையின் வெளிப்பாடும்;

இயேசு கிறிஸ்து சிலுவையில் மரிக்க வில்லையென்றும் வேதாகமத்தில் புதிய ஏற்பாடு பகுதியை அவரது சீடர்களால் எழுதப்பட்டதனால், அதை அவர்கள் மறைத்திருக்க கூடும்மென்று சிலர் ஆதாரமில்லாமல் குற்றஞ்சாற்றுவர். அவர்களின் குற்றச்சாட்டின்படி தனியே சீடர்களால் மட்டுமின்றி இயேசு கிறிஸ்துவின் காலத்தில் வாழ்ந்த பல சரித்திர ஆசிரியர்களும் இயேசுகிறிஸ்துவின் சிலுவை மரணத்தைப்பற்றி குறிப்பிட்டிருக்கின்றபடியாலும்; இக் குற்றச்சாற்றுக்கள் பொய் என்று தெட்டத்தெளிவாக தெரிகின்றது.

🔎 இயேசு சிலுவையில் மரித்ததற்கான வரலாற்று ஆதாரங்கள்;



👉 FLAVIUS JOSEPHUS
(உலகப்புகழ் பெற்று யூத சரித்திர ஆசிரியர்)

கிறிஸ்துவின் மரணத்திற்கு சில ஆண்டுகளுக்குப்பின்பு கி.பி 66 ஆம் ஆண்டளவில் கலிலேயாவிலுள்ள யூத இராணுவஅதிகாரியாக இருந்தவர். அவர் தன்னுடைய புஸ்தகம் 'யுவெஙைரவைநைள' இல் கிறிஸ்துவைப்பற்றியும் அவர் சிலுவையில் அறையப்பட்டதைக்குறித்தும் இப்படி குறிப்பிட்டுள்ளார்.
இப்பொழுது இயேசுவின் காலம் வந்துவிட்டது, ஒரு ஞானி, சட்டத்தின்படி கூறுவதென்றால் ஒரு மனிதர், அநேக அற்புதங்களை செய்தவர். அவர் அநேகருக்கு போதித்தார், அவருடைய சத்தியமான போதனைகளை சந்தோஷத்துடனும் ஏற்றுக்கொண்டார்கள். பொந்தியு பிலாத்துவினால் சிலுவையில் அறையப்பட்டார். ஆனாலும் இயேசுவை உண்மையாக நேசித்தவர்கள், அவர்களுடைய நம்பிக்கையை விட்டுக்கொடுக்கவில்லை. மூன்றாம் நாளில் அவர் தம்முடைய சீடர்களுக்கு உயிருடன் காட்சியளித்தார். அவருக்கு முன்பு வந்த பல தீர்க்கதரிசிகள் அவரைக்குறித்து பல அற்புதமான தீர்க்கதரிசனங்கள் சொன்னது அவ்வளவும் அவருக்கு பொருத்தமாக இருந்ததது.
http://www.ccel.org/j/josephus/JOSEPHUS.HTM (அவர் எழுதிய புஸ்தகம்)


👉 JUSTIN MARTYR (Philosopher, Apologist)

- Apologetics: "the defense of a position against an attack", not from the English word apology.
கி.பி 150 ஆண்டளவில் சீசார் அந்தோனியுஸ் பியுஸ்-க்கு "கிறிஸ்தவர்கள் தற்காப்பு" எனும் அவர் எழுதிய புஸ்தகத்தில் இயேசுகிறிஸ்துவின் மரணத்தைப்பற்றியும், அவர் மரணத்திற்கு பொந்தியு பிலாத்து காரணமாக இருந்தததைப்பற்றியும் எழுதியிருக்கின்றார்.
http://www.catholic-forum.com/saints/stj29002.htm


👉 CORNELIUS TACITUS (born A.D 52-54)

இவர் ஒரு ரோம சரித்திர ஆசிரியர், கி.பி112 ஆசியாவின்(துருக்கி) கவர்னராக இருந்தவர். இவருடைய உறவினன் யூலியுஸ் அக்ரிகோலா என்பவர் கி.பி 82-84 பிரித்தானிய கவர்னாராக இருந்தவர்; கொர்நேலியுஸ் ரசித்துஸ் நேரோ மன்னனுடைய ஆட்சியைப்பற்றி குறிப்பிடுகையில் இயேசு கிறிஸ்துவைப்பற்றியும், ரோமாபுரியிலே கிறிஸ்தவத்தின் ஆரம்பத்தையும் பற்றி தன்னுடைய புஸ்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் எழுதிய நூலில் (XV) ஆம் பாகத்தில்:
இயேசு கிறிஸ்து என்பவர் திபேரியு மன்னன் ஆட்சியில், பொந்தியு பிலாத்து யூதாவின் அதிகாரியாக இருக்கையில் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையைப்பற்றி எழுதியிருக்கின்றார்.
http://classics.mit.edu/Tacitus/annals.html (அவர் எழுதிய புஸ்தகம்)


👉 LUCIAN OF SAMOSATA கி.பி 120-180

இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர் தம்முடைய புஸ்தகத்தில் பலஸ்தீனாவிலே பிறந்த இயேசு கிறிஸ்துவைப்பற்றியும், அவருடைய மரணத்தைப்பற்றியும் எழுதியுள்ளார்.
http://www.paulmusgrave.com/blog/archives/000066.html


👉 MARA BAR-SERAPION

இவர் சீரியா நாட்டை சார்ந்தவர், இவருடைய காலம் கி.பி 70 இவர் ஜெயிலில்இருந்து தனது மகனுக்கு எழுதிய கடிதத்தில் யூதர்கள் தங்களுடைய ஞானமுள்ள இராயாவை கொலை செய்தனர் என்று குறிப்பிட்டிருக்கின்றார்.
http://www.neverthirsty.org/pp/hist/marbar.html


👉 PLINY THE YOUNGER

கி.பி 110 இல் இவர் சின்ன ஆசியாவின் பித்தினியாவின் கவர்னராக இருந்தவர். இவர் தன்னுடைய தலைவர் த்ரஜான்-க்கு எழுதிய கடிதத்தில் இயேசு கிறிஸ்துவின் சீடர்கள் எப்படிப்பட்டவர்களாக இருந்தார்கள் என்று குறிப்பிட்டிருக்கின்றார்.
அவர்கள் செய்த தவறுகள், அல்லது அவர்களுடைய பைத்தியக்கார தன்மைகள் என்னவெனில், குறிப்பிட்ட சில நாட்களில் அதிகாலையில் சூரிய உதயத்திற்கு முன எழுந்திருந்து இயேசுகிறிஸ்துவை ஒரு கடவுளைப்போல கும்பிடுகின்றனர். அவர்களிடத்தில் எந்தவிதமான தவறுகளும் இல்லை. களவு, கொள்ளை, விவாக இரத்து, அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வார்த்தைகளை மீறுவது போன்ற காரியங்கள் அவர்களிடத்தில் இல்லை.
http://www.earlychristianwritings.com/text/pliny.html


👉 SUETONIUS

இவர் ஒரு ரோம எழுத்தாளர், இவர் எழுதிய"க்ளோடியஸ் வாழ்க்கை வரலாறு" பகுதியில் கிறிஸ்தவர்களை ரோமை விட்டுக்ளோடியஸ் போகச்சொல்லி துரத்தியதைப்பற்றி குறிப்பபிட்டிருக்கின்றார். இவருடைய வாழ்க்கை காலம் கி.பி 69-122.
http://www.fordham.edu/halsall/ancient/suetonius-julius.html


👉 TERTULLIAN

கி.பி 155-220 வாழ்ந்த இவர் இயேசு கிறிஸ்துவைப்பற்றியும் அவரது வாழ்க்கையைப்பற்றியும், மரணத்தைப்பற்றியும் எழுதியிருக்கின்றார்.
http://www.earlychristianwritings.com/tertullian.html


👉 PHLEGON

கி.பி 140, முதலாம் நூற்றாண்டை சேர்ந்த எழுத்தாளர், இவருடைய புஸ்தகங்கள் இப்போது இல்லை. தொலைந்து விட்டன. ஆனால் வேறு புரதான சரித்திர ஆய்வாளர்கள் இவருடைய எழுத்துக்களைப்பற்றி கூறும் சமயத்தில், இவர் இயேசுவின் சிலுவை மரணத்தைப்பற்றி குறிப்பிட்டிருந்தார் என்று கூறுகின்றார்கள்.


👉 THULUS

இவரும் முதலாம் நூற்றாண்டை சார்ந்த எழுத்தாளன், காலம்: கி.பி 52. இவருடைய புஸ்தகங்களும் இப்போது இல்லை. தொலைந்து விட்டன. ஆனால் இவருடைய புஸ்தகங்களைப்பற்றி வேறு புராதான சரித்திர ஆய்வாளர்கள் கூறுகையில்: இவரும் இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தைப்பற்றி தன்னுடைய புஸ்தகத்தில் குறிப்பிட்டிருந்தார் என்று. The Chronology of Julius Africanus எனும் கி.பி 221 எழுதப்பட்ட புஸ்தகத்தில் காணலாம்.
இதிலே குறிப்பிடப்பட்டிருக்கின்ற அநேகர், மாபெரும் மேதைகள், படித்தவர்கள், தங்களுடைய கால கட்டங்களிலுள்ள சரித்திரத்தை எழுதியவர்கள். இயேசுகிறிஸ்துவினுடைய காலத்திலிருந்து கி.பி 250 வரையிலான சரித்திரங்களின் ஆசிரியர்கள்.










பரிசுத்த வேதாகமத்தை அழிக்க முயன்றவர்களில் சிலர்;


☝ வால்டர் எனும் பிரெஞ்சு நாஸ்திகன்: இன்னும் 100 வருடத்தில் வேதாகமம் இருக்காது, எல்லாரும் கல்வி கற்று அறிவடைந்து விடுவார்கள். வேதாகமத்தை ஒருவரும் வாசிக்க மாட்டார்கள். வேதாகமத்தை பார்க்க வேண்டுமானால் பண்டைக்கால மியூசியத்திற்கு தான் சென்று பார்க்க வேண்டும், கிறிஸ்தவ மார்க்கமே இருக்காது என்றான். இவன் இப்படி கூறிய ஆண்டு கி.பி 1750ல் கி.பி 1778ல் வால்டர் மரித்தான். அவன் இறந்து சுமார் 50 ஆண்டுகளுக்குள் ஜெனிவா வோதாகம சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. வால்டரின் நாஸ்திக புஸ்தகங்கள் அச்சிடப்பட்ட அதே அச்சகத்தில் வேதாகமங்கள் ஆயிரக்கணக்கில் அச்சிடப்பட்டன. வால்டர் வசித்த வீட்டிலேயே இந்த வேதாகமங்கள் பாதுகாப்பிற்காக வைக்கப்பட்டன. வால்டர் போய் சேர்ந்துவிட்டான். ஆனால், இன்று பரிசுத்த வேதாகமம் இல்லாத நாடே கிடையாது.

✌ வேதாகம நூல்கள் யாவையும் சேகரித்து அழித்துவிடவும், கிறிஸ்தவ ஆராதனைகளை உடனே நிறுத்திவிடவும், ரோமப் பேரரசனான டயக்ளீசியன் கி.பி 303ல் ஒரு கட்டளை பிறப்பித்தான். கிறிஸ்தவ ஆலயங்கள் இடித்து தரை மட்டமாக்கப்பட்டன. வேதாகம நகல்கள் தீக்கிரையாக்கப்பட்டன. கிறிஸ்தவ அதிகாரிகளாக இருந்தவர்களின் உயர் பதவிகள் பறிக்கப்பட்டன. சாதாரண குடிமகனுக்கிருந்த உரிமைகளையும் இழந்தார்கள். கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டனர். 25 ஆண்டுகளுக்குப்பின் கொன்ஸ்டான்டைன் ரோமப் பேரரசன் ஆனான். இயேசுவை ஏற்றுக்கொண்டு கிறிஸ்தவனானான். வேதாகமத்தின் 50 நகல்களை அரசாங்க செலவில் உடனே ஆயத்தப்படுத்தும்படி கட்டளை பிறப்பித்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

சனி, 24 டிசம்பர், 2016

அகழ்வாராய்ச்சி உறுதிப்படுத்துகிறது வேதம் உண்மை என்பதை. அவற்றில் சில...,

👉 சாஸ்திரிகள் கண்ட நட்சத்திரத்தைக்குறித்து மத்தேயு-2'ம் அதிகாரத்தில் காண்கிறோம். இதே கால கட்டத்தில் வாழ்ந்த சீன(China) வானசாஸ்திரிகள் அப்படியொரு நட்சத்திரத்தைக் கண்டதாக குறிப்பு எழுதி வைத்துள்ளதை, சமீபத்தில் கண்டுப்பிடித்துள்ளனர்.


👉 1947 இல் சவக்கடல் அருகில் உள்ள குகைகளில் ஒரு ஆட்டு இடையனால் கண்டு பிடிக்க பட்ட சுருள்கள்; பழைய ஏற்பாட்டு புத்தகங்களில் காலங்களையும் பிழையற்ற தன்மையையும் உறுதி செய்வதாக காணப்படுகின்றது. இந்த தோல் சுருள்கள் கி.மு 200 முதல் கி.பி 68 க்கு இடைப்பட்ட காலங்களை சார்ந்ததாக காணப்படுகின்றன. ஒரு தொல்சுருள் ஏசாயா புத்தகத்தின் முழு பிரதியாக காணப்படுகின்றது. ஆயிர வருஷங்களுக்கு முந்திய காலத்தை சார்ந்த இப்பிரதிகள், கி.பி ஒன்பதாம் நூற்றாண்டை சார்ந்த மசொறேடிக்(masoretic copies) பிரதிகளுடன் ஒத்துபோவதாக இருக்கின்றது.

👉 உலகப் புகழ்பெற்ற புதைபொருள் ஆராய்ச்சியாளர்களில் ஒருவர் சேர் வில்லியம் ரம்சே என்பவராவார் (1851-1939) சிறந்த கல்விமானும் ஆராய்ச்சியாளருமான இவர் பிரித்தானிய,ஐரோப்பிய, அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் 9 கலாநிதிப் பட்டங்களைப் பெற்றிருந்தார். எனினும்,இவர் புதிய ஏற்பாட்டுச் சம்பவங்கள் அனைத்தும் எதுவித சரித்திர ஆதாரமும் அற்ற கட்டுக்கதைகள் என்றே கருதி வந்தார்.

புதைபொருள் ஆராய்ச்சியாளரான இவர், லூக்கா சுவிஷேசத்திலும் அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகத்திலும் குறிப்பிடப்பட்டுள்ள சம்பவங்கள் தவறானவை என்பதை நிரூபிப்பதற்காக சின்ன ஆசியா பகுதிக்கு (தற்போதைய துருக்கி நாடு) அனுப்பப்பட்டார். புதிய ஏற்பாட்டுச் சம்பவங்கள் நடைபெற்றதாகக் கூறப்படும் இடங்களில் தான் மேற்கொள்ளும் ஆராய்ச்சிகள், புதிய ஏற்பாட்டு விடயங்கள் நம்பகமற்றவை என்பதற்கான ஆதாரங்களைத் தரும் எனும் நம்பிக்கையுடன் இருந்த வில்லியம் ராம்சே, தனது நோக்கத்திற்கு எதிரான ஆதாரங்களையே கண்டுபிடித்தார். அதாவது லூக்காவின் எழுத்துக்கள் (சுவிஷேசமும் அப்போஸ்தலர் நடபடிகளும்) சரித்திர ரீதியாக எவ்வித பிழையுமற்றவை என்பதை வில்லியம் ராம்சேயின் ஆராய்ச்சிகள் அவருக்குச் சுட்டிக் காட்டின.

லூக்கா தனது இரு நூல்களிலும் குறிப்பிட்டுள்ள சரித்திர விடயங்கள் குறிப்பாக நகரங்கள், ஆட்சியாளர்கள் பற்றிய விபரங்கள் அனைத்தும் நூற்றுக்கு நூறு சதவீதம் சரியானவை ஒரு சிறிய விடயத்தில் கூட தனது கண்டுபிடிப்புக்கும் லூக்காவின் நூல்களுக்கும் விவரி முரண்பாடும் இல்லை என்பதை வில்லியம் ராம்சே கண்டுபிடித்தார். இது அவர் கிறிஸ்தவராகவதற்கும் புதிய ஏற்பாட்டுச் சரித்திரம் பற்றி சில நூல்களை எழுதுவதற்கும் காரணமாயிற்று.“லூக்கா எழுதியுள்ள விடயங்கள் அனைத்தும் உண்மையானவை“ என்று அவரே குறிப்பிட்டுள்ளார்.

இயேசுக்கிறிஸ்து தெரிவித்ததுபோல வேதவாக்கியங்கள் தவறாததாயிருக்கின்றது (யோவா 10.35) அதில் எவ்விதமான பிழையும் இல்லை. யூத புதைபொருள் ஆராய்ச்சியாளரான நெல்சன் குலூயிக் என்பார் இதுவரையில் 25,000 இற்கும் அதிகமான இடங்களில் மேற்கொள்ளப்பட்ட புதைபொருள் ஆராய்ச்சிகளில் ஒன்று கூட வேதவசனத்தை முரண்படுத்துவதாய் இல்லை. அனைத்தும் வேதாகமம் உண்மை என்பதை நிரூபிப்பனவாகவே உள்ளன என்பதை அறியத்தருகிறார்.

வியாழன், 15 டிசம்பர், 2016

தள்ளுபடி ஆகமங்கள் (THE APOCRYPHAL BOOKS)

அப்போக்ரைபா என்றால் மறைக்கப்பட்டது அல்லது மூடப்பட்டது என்பதாகும். கனோனின் விதிகளை சில புத்தகங்கள் நிறைவேற்றவில்லை. அவைகள்: 1 எஸ்ரா, 2 எஸ்ரா, தோபித், யூடித், எஸ்தரின் ஓய்வு,சலோமின் ஞானங்கள், பிரசங்கிகள், பாரூக், மூன்று எபிரேய குழந்தைகளின் பாடல்கள், சூசன்னாவின் வரலாறு, பாகாலும் வலுசர்ப்பமும், மனாசாவின் ஜெபம், 1 மேக்காபீயர்கள், 2மேக்காபீயர்கள் மற்றும் எரேமியாவின் கடிதம்.


1546ல் டிரென்ட் ஆலோசனைக்கூட்டத்தில், ரோமன் கத்தோலிக்க சபை இப்புத்தகங்களை ஏற்றுகொண்டாலும் புரட்டஸ்தாந்து சபைகள் பரிசுத்தாவியின் ஏவுதலால் எழுதப்பட்ட புத்தகங்கள் அல்லவென்று நிராகரித்து விட்டன. ஒருவேளை இப்புத்தகங்களில் வரலாற்று உண்மைகளும், திறமைகளும் இருந்தாலும் இவைகள் கீழ்காணும் காரங்களால் தள்ளப்படுகின்றன.

👉 தள்ளுபடி ஆகமங்களை எழுதிய ஆசிரியர்கள் எவரும் தெய்வீக ஏவுதலை தெரிவிக்கவில்லை, சிலர் இதனை மறுக்கின்றனர். (உதாரணமாக: 1 மக் 4:46 , 11 மக் 2 :23, 15 , 38 )

👉 அநேக கிரேக்க மொழிபெயர்ப்பில் இவைகள் இடம்பெற்றிருந்தாலும் எபிரேயு பதிப்பில் இவைகள் இடம்பெறவில்லை.

👉 ஜெமினியாவில் 90 கி.பி யில் நடந்த ஆலோசனைக்கூட்டத்தில் யூதர்கள் இவைகளை ஏற்றுக் கொள்ளவில்லை.

👉 இந்த புத்தகங்களில் பொய்யான வரலாறும், இடங்களும், தவறான வருடங்களும், உண்மையற்ற கட்டுகதைகளும் காணப்படுகின்றன.

👉 வேதத்தில் சொல்லப்பட்ட தரமான உபதேசங்களுக்கு மாறாக சில பொய்யான உபதேசங்களை உபதேசிக்கின்றது (தற்கொலை, தாக்குதல், மரித்தோருக்கானஜெபம் போன்ற காரியங்களை நியாயப்படுத்துகின்றது).

👉 இயேசுவும் புதிய ஏற்பாட்டு ஆசிரியர்களும் இந்த புத்தகங்களிலிருந்து ஒரு குறிப்பும் எடுத்து சொன்னதில்லை. அனால் மற்ற புத்தகங்களில் இருந்து நூற்றுக்கணக்கான குறிப்புகளை எடுத்துரைத்திருக்கிறார்கள்.

👉 ஆதிகால சபை பிதாக்களான ஒரிஜன், ஜெரோம், டட்டுலியன், ஜெருசலேம் சிறில், தேர்ட்டுலியன் மற்றும் ஆத்ரசியஸ் போன்றவர்கள் இவைகளுக்கு எதிராக பேசினார்கள்.

👉 முதல் நான்கு நூற்றாண்டுகளில் வேத சம்பந்தபட்ட ஆலோசனைக்கூட்டங்களில் இவைகள் அங்கீகரிக்கபடவில்லை.

👉 லூத்தரும், சீர்திருத்தவாதிகளும் இந்த புத்தங்களை நிராகரித்தனர்.

👉 சீர்திருத்த காலங்களில் இருந்த ரோமன் கத்தோலிக்க அறிஞர்களும் தள்ளுபடி ஆகமங்களை நிராகரித்தனர்.

செவ்வாய், 13 டிசம்பர், 2016

பரிசுத்த வேதாகமத்தை எமக்குத் தந்தவர் :

பரிசுத்த வேதாகமத்தை கிறிஸ்தவர்களின் வேதம் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் அது அப்படி அல்ல. இவ்வுலகில் வாழும் ஒவ்வொருவருமே படித்துப் பின்பற்ற வேண்டிய புனித நூல் பரிசுத்த வேதாகமம்.


பரிசுத்த வேதாகமம் கடவுளைப் பற்றியும், மனிதனைப் பற்றியும் எடுத்துரைக்கிறது. பரிசுத்த வேதாகமத்தில் பாவத்தின் பயங்கரமும் பரிசுத்தத்தின் மேன்மையும் விளக்கப் பட்டிருக்கிறது. பாவத்திலிருந்து மனிதனை மீட்க தேவன் வகுத்த திட்டத்தை பரிசுத்த வேதாகமம் விளக்குகிறது.

ஆதாம் முதல் மோசேயினுடைய காலம் வரை வேதாகமம் எழுதபட்டிருக்கவில்லை. தேவனுடைய வார்த்தைகள் ஒருவர் வழியாக மற்றவர்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆதி நாட்களில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் வரை மனிதர்கள் வாழ்ந்ததினால் ஏராளமானதகவல்களை அறிந்திருந்தார்கள். தங்கள்பின் வரும் சந்ததியினருக்கும் அறிவித்தார்கள். உதாரணமாக ஆதாம் 930 வருடங்கள் வாழ்ந்திருந்தான். அவனுடையநாட்களில் ஏராளமான சந்ததிகளை கண்டிருப்பான். ஏராளமான தகவல்களை அவர்களுடன் பகிர்ந்திருப்பான். நோவா950 வருடங்கள் வாழ்ந்தான். ஜலப்பிரளயத்திற்கு பின்பு மனிதனுடைய வாழ்நாள் மிகவும் குறைந்து விட்டது. இந்த நாட்களில் தான் பரிசுத்த ஆவியானவர் மோசே போன்ற தலைவர்களை பரிசுத்த எழுத்துக்களை எழுதும்படி ஏவினார். வேதாகமத்தின் ஆக்கியோன் பரிசுத்த ஆவியானவரே. அவர் அந்தந்தக்காலத்தில் பல்வேறு மனிதர்களை கருவியாகப்பாவித்தார். எனவே தான் வேதாகமம் சுமார் 1600 வருடஇடைவெளியில் பல்வேறு மனிதர்களால் எழுதப்பட்டாலும் அதின் கருப்பொருள் ஒன்றாகவே இருக்கிறது. கருத்தொற்றுமையும் ஆச்சரியமானது.

பழைய ஏற்பாடு எபிரேயு பாஷையிலும், புதிய ஏற்பாடு கிரேக்க பாஷையிலும் எழுதப்பட்டது. சில புத்தகங்கள் அரமிக் மொழியிலும் எழுதப்பட்டது. பழைய ஏற்பாடு எழுதப்பட்ட காலம் கிட்டத்தட்ட கி.மு 1450 - கி.மு 400 இடைப்பட்ட 1050 வருட காலத்தில் எழுதப்பட்டது. பழையேறபாட்டின் சரித்திரக்காலம் கி.மு 4000- கி.மு 400 வரை. பழையேற்பாட்டின் முதல் 5 புத்தகங்கள் பஞ்ச ஆகமம் என்று அழைக்கப்படுகின்றது. இப்புத்தகங்கள் மோசேயினால் எழுதப்பட்டவையாகும். எழுதப்பட்ட காலம் 1446- 1406 வரை ஆகும். பஞ்ச ஆகமங்களை தோரா என்று எபிரேய மொழியில் அழைப்பார்கள்.

வேதாகமம் தேவ ஆவியானவரால் ஏவப்பட்டு 40 ஆசிரியர்களினால்(ஏறக்குறைய) எழுதப்பட்டது. இவர்களில் இடையர்கள், இராஜாக்கள், மீனவர்கள், நீதிபதிகள், பிரதம மந்திரி, தீர்க்கதரிசிகள், அரசியல் தலைவர்கள், வரி வசூலித்தவர்கள், மருத்துவர்கள் போன்றபலநிலைப்பட்டவர்களும் இருந்தனர். 

அல்பாவும், ஓமெகாவும் :


கிரேக்க மொழியில் மொத்தம் 24 எழுத்துக்கள் உள்ளன. இதில் முதல் எழுத்து “அல்பா” கடைசி எழுத்து "ஒமேகா" ஆகும்.
நம் தேவனின் நாமமும் இதுவே...


"இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஓமெகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று திருவுளம்பற்றுகிறார்."(வெளி. 1:8).

"நான் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன்."(வெளி. 22:13).