☝ வால்டர் எனும் பிரெஞ்சு நாஸ்திகன்: இன்னும் 100 வருடத்தில் வேதாகமம் இருக்காது, எல்லாரும் கல்வி கற்று அறிவடைந்து விடுவார்கள். வேதாகமத்தை ஒருவரும் வாசிக்க மாட்டார்கள். வேதாகமத்தை பார்க்க வேண்டுமானால் பண்டைக்கால மியூசியத்திற்கு தான் சென்று பார்க்க வேண்டும், கிறிஸ்தவ மார்க்கமே இருக்காது என்றான். இவன் இப்படி கூறிய ஆண்டு கி.பி 1750ல் கி.பி 1778ல் வால்டர் மரித்தான். அவன் இறந்து சுமார் 50 ஆண்டுகளுக்குள் ஜெனிவா வோதாகம சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. வால்டரின் நாஸ்திக புஸ்தகங்கள் அச்சிடப்பட்ட அதே அச்சகத்தில் வேதாகமங்கள் ஆயிரக்கணக்கில் அச்சிடப்பட்டன. வால்டர் வசித்த வீட்டிலேயே இந்த வேதாகமங்கள் பாதுகாப்பிற்காக வைக்கப்பட்டன. வால்டர் போய் சேர்ந்துவிட்டான். ஆனால், இன்று பரிசுத்த வேதாகமம் இல்லாத நாடே கிடையாது.
✌ வேதாகம நூல்கள் யாவையும் சேகரித்து அழித்துவிடவும், கிறிஸ்தவ ஆராதனைகளை உடனே நிறுத்திவிடவும், ரோமப் பேரரசனான டயக்ளீசியன் கி.பி 303ல் ஒரு கட்டளை பிறப்பித்தான். கிறிஸ்தவ ஆலயங்கள் இடித்து தரை மட்டமாக்கப்பட்டன. வேதாகம நகல்கள் தீக்கிரையாக்கப்பட்டன. கிறிஸ்தவ அதிகாரிகளாக இருந்தவர்களின் உயர் பதவிகள் பறிக்கப்பட்டன. சாதாரண குடிமகனுக்கிருந்த உரிமைகளையும் இழந்தார்கள். கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டனர். 25 ஆண்டுகளுக்குப்பின் கொன்ஸ்டான்டைன் ரோமப் பேரரசன் ஆனான். இயேசுவை ஏற்றுக்கொண்டு கிறிஸ்தவனானான். வேதாகமத்தின் 50 நகல்களை அரசாங்க செலவில் உடனே ஆயத்தப்படுத்தும்படி கட்டளை பிறப்பித்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக