வியாழன், 22 மார்ச், 2018

EL- OLAM - நித்யத்திற்க்கும் தேவன்




EL- OLAM - நித்யத்திற்க்கும் தேவன் (EL o-lawm')

☞ இந்த வார்த்தை முதன் முதலில் ஆதி 21: 33 ல் உரைக்கப்படுகிறது. 
எரேமியா 10:10; ஏசாயா 26: 4 லிலும் உள்ளது. 

☞ ஆபிரகாம் பெயர்செபாவிலே ஒரு தோப்பை உண்டாக்கி, சதாகாலமுமுள்ள தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை அவ்விடத்தில் தொழுதுகொண்டான். (ஆதியாகமம் 21: 33)

☞ ஏசாயா 26:4 கர்த்தரை என்றென்றைக்கும் நம்புங்கள்; கர்த்தராகிய யேகோவா நித்திய கன்மலையாயிருக்கிறார். 

☞ EL என்றால் தேவனை குறிக்கும் சொல். அதோடு சேர்த்து வருகிற சொல் தேவனுடைய குணம்- பண்புகள் பற்றி குறிக்கும்.

☞ Olam என்றால் எக்காலத்திற்க்கும் உள்ள என பொருள்படும்.

☞ El- olam என்றால் 
"நித்யத்திற்க்கும் தேவன்"
நித்யானந்தா என்பது பொருத்தமாக இருக்கும்.

☞ 1 திமோ 1: 11 ல், நித்தியானந்த தேவனுடைய மகிமையான சுவிசேஷத்தின்படி எனக்கு ஒப்புவிக்கப்பட்டிருக்கிற ஆரோக்கியமான உபதேசத்திற்கு எதிரிடையாயிருக்கிற மற்றெந்தச் செய்கைக்கும் விரோதமாய் விதிக்கப்பட்டிருக்கிறது.

☞ 1 தீமோத்தேயு 6:15- 16 அந்தப் பிரசன்னமாகுதலை தேவன் தம்முடைய காலங்களில் வெளிப்படுத்துவார், அவரே நித்தியானந்தமுள்ள ஏக சக்கராதிபதியும், ராஜாதி ராஜாவும், கர்த்தாதி கர்த்தாவும்,

☞ ஒருவராய், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர்; அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக. ஆமென்.

நன்றி நண்பறே...

1 கருத்து:

  1. தங்களின் அனைத்து பதிவுகளும் ஆவிக்குரிய வாழ்வுக்கான விழிப்புணர்வு செய்திகள். மிக்க நன்றி

    பதிலளிநீக்கு