2005-ஆம் ஆண்டு, தாவீது ராஜாவின் அரண்மனையைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஓர் இடத்தைத் தோண்டினார்கள்; அப்போது, பெரிய கல் கட்டடம் ஒன்றைக் கண்டுபிடித்தார்கள். அது, 2,600-க்கும் அதிக ஆண்டுகளுக்கு முன்பு கர்த்தருடைய தீர்க்கதரிசியான எரேமியா வாழ்ந்த காலத்தில், எருசலேமை பாபிலோனியர்கள் தீக்கிரையாக்கியபோது அழிக்கப்பட்டிருக்கலாமென அவர்கள் நம்பினார்கள். அது தாவீதின் அரண்மனையின் எஞ்சிய பாகமா என்பது உறுதியாகத் தெரியவில்லை. எனினும், சுவாரசியமூட்டும் முக்கியப் பொருள் ஒன்றை அங்கு தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஏலாட் மசார் கண்டுபிடித்தார்; அது 1 சென்டிமீட்டர் அகலமுள்ள களிமண் முத்திரை ஆகும்: அதில், “ஷாவியின் மகனான ஷெலெமியாஹுவின் மகனான யஹுகாலுடையது” என்ற வாசகம் காணப்படுகிறது. இந்த முத்திரை உண்மையில் எரேமியாவை எதிர்த்து வந்ததாக வேதாகமத்தில் குறிப்பிடப்படும் யூத அதிகாரியான யஹுகால் (யூகால் என்றும் அறியப்பட்டார்) என்பவருடையது. - எரேமியா 37:3; 38:1-6.
இந்த யூகால், சாப்பானின் குமாரனான கெமரியாவுக்கு அடுத்தபடியான “இரண்டாவது அரசவை மந்திரி” என்று மசார் குறிப்பிடுகிறார்; இந்த யூகாலின் பெயரே தாவீதின் நகரத்தில் கண்டெடுக்கப்பட்ட முத்திரையில் காணப்படுகிறது. இந்த யூகாலை, செலேமியாவின் (ஷெலெமியாஹுவின்) குமாரன், யூதாவின் பிரபுவென வேதாகமம் அடையாளம் காட்டுகிறது. இந்த முத்திரை கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு, பரிசுத்த வேதாகமத்தை வாசிப்பவர்கள் மட்டுமே இவரை அறிந்திருந்தார்கள். மற்றவர்கள் அறியாதிருந்தார்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக