அசீரிய ராஜாவான இரண்டாம் சர்கோனின் பெயர் ஏசாயா 20:1-ல் காணப்படுகிறது; ஆனால், அப்படி ஒரு நபர் உண்மையில் வாழவே இல்லையென ஒரு சமயம் பிரபல அறிஞர்கள் நினைத்தார்கள். எனினும், 1843-ல் ஈராக்கில் இன்றைய கர்சபாத் நகருக்கு அருகில், டைகிரீஸ் நதியின் உபநதியினுடைய கரையில் சர்கோனின் அரண்மனை கண்டுபிடிக்கப்பட்டது. அது சுமார் 25 ஏக்கர் பரப்பளவை ஆக்கிரமித்திருக்கிறது. ஒருகாலத்தில் உலகத்தார் எவரும் அறிந்திராத இரண்டாம் சர்கோன், இன்று பிரபல அசீரிய ராஜாக்களில் ஒருவராய் கருதப்படுகிறார்.
- அவருடைய பதிவேடுகள் ஒன்றில், இஸ்ரவேலரின் நகரமான சமாரியாவைக் கைப்பற்றியதாக அவர் சொல்கிறார். வேதாகம காலவரிசைப் பட்டியலின்படி, கி.மு. 740-ல் சமாரியாவை அசீரியர்கள் கைப்பற்றினார்கள். அஸ்தோத்தைக் கைப்பற்றியதாகவும்கூட சர்கோன் எழுதியிருப்பது, ஏசாயா 20:1-ஐ மேலும் உறுதிப்படுத்துகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக